கன்னிகாபரமேஸ்வரி அம்மன் அவதார தினம்
ADDED :2763 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் அவதார தின விழா நடந்தது. திருக்கோவிலுாரில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மன் அவதார திருநட்சத்திரவிழா நடந்தது. காலை 7:00 மணிக்கு, பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து 10:30 மணிக்கு ேஹாமம்‚ அம்மனுக்கு மகா அபிேஷகம்‚ அலங்காரம்‚ தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு‚ மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சோட சோபவுபச்சாரா தீபாராதனை‚ இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஆர்யவைசிய சமூகத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள்‚ பக்தர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தொடர்ந்து வாசவி‚ வனிதா கிளப் சார்பில், காலை 11:00 மணிக்கு ரத்த தான முகாம் நடந்தது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சிறப்பு டாக்டர்கள் ரத்ததானம் பெற்றுக் கொண்டனர்.