சுகவனேஸ்வரர் கோவிலில் ராஜேஸ்வரி உருவப்படம் திறப்பு
ADDED :2761 days ago
சேலம்: சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி உருவப்படம் திறக்கப்பட்டது. சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த, 21ல் இறந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, சுகவனேஸ்வரர் கோவில் பக்தர்கள் சார்பில், யானைக்கு மோட்ச தீபமேற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதில், தீபமேற்றி, சுகவனேஸ்வரர் சுவாமி முன், சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, அதிகார நந்தி முன், ராஜேஸ்வரியின் உருவப்படம் திறக்கப்பட்டது. அதை பக்தர்கள் பார்வையிட, கோவில் வளாகத்திற்குள் வைக்கப்படும்.