அரங்கநாதர் கோவில் ராஜகோபுர பணி துவக்கம்!
ADDED :5056 days ago
காரமடை : கோவை அருகே காரமடை அரங்கநாதர் கோவிலில், ராஜகோபுரத்தின், இரண்டாம் நிலை கட்டுமானப் பணிகள் துவங்கின. கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: காரமடை அரங்கநாதர் கோவிலில், 65 லட்சம் ரூபாயில், மொத்தம் 81 அடி உயரத்துக்கு, ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள், 2005ம் ஆண்டு துவங்கின. இருபத்தி மூன்றரை அடி உயரத்துக்கு, கல்காரப்பணிகள் முடிந்து, கான்கிரீட் போட்டு முடிக்கப்பட்டுள்ளன. கோபுரத்தில், ஐம்பத்தேழரை அடி உயரத்தில் ஏழு நிலைகள் அமைக்கப்படும். கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி, முதல்நிலை செங்கல் கட்டட கட்டுமானப் பணிகள் துவங்கின. தற்போது, இரண்டாம்நிலை அமைக்க, கான்கிரீட் போடப்பட்டது. ஏழுநிலையும் அமைத்த பிறகு, சுதை செய்யும் பணிகள் நடைபெறும். அனைத்து பணிகளும், குறிப்பிட்ட காலத்தில் விரைவாக செய்து முடிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.