உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் சுபத்திரை திருக்கல்யாணம்

திரவுபதியம்மன் கோவிலில் சுபத்திரை திருக்கல்யாணம்

திருத்தணி : திரவுபதி அம்மன் கோவிலில், உற்சவர் அம்மன் புஷ்ப பல்லக்கு மற்றும் சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. திருத்தணி பழைய திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நடந்து வருகிறது. விழாவின் ஒன்பதாம் நாளான, நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு நடந்தது.மதியம், சுபத்திரை திருக்கல்யாணம் மற்றும் அன்னதானம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்ததுதொடர்ந்து, உற்சவர் அம்மன், புஷ்ப பல்லாக்கில் சிறப்பு வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மறுநாள், அர்ச்சுனன் தபசு, அடுத்த மாதம், 6ம் தேதி காலையில், துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுத்தலைவர் செல்வராஜ் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !