ஸ்ரீவில்லிபுத்துார் ஆற்றில் ஆண்டாள் ரெங்கமன்னார்
ADDED :2759 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: சித்ராபவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 9:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் ஆண்டாள் பச்சை பட்டு அணிந்து சேஷ வாகனத்திலும், ரெங்கமன்னார் நீலப் பட்டு அணிந்து குதிரை வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக மண்டபங்களில் எழுந்தருளினர். ஆத்துகடை பகுதிக்கு காலை 11:00 மணிக்கு வந்தனர். அங்கு ஆண்டாளை, ரெங்கமன்னார் மூன்று முறை வலம் வந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்தனர்.விழாவில் வி.பி.எம்.சங்கர், வெங்கடேச பட்டர், மணியம் ஸ்ரீராம், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ் மற்றும் அறநிலையத்துறையினர் கலந்து கொண்டனர்.