உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் தலை மீது ஊர்ந்த நாகப்பாம்பு: பக்தர்கள் பரவசம்

மாரியம்மன் தலை மீது ஊர்ந்த நாகப்பாம்பு: பக்தர்கள் பரவசம்

தஞ்சாவூர்: பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் தலையில், நாகப்பாம்பு ஒரு மணி நேரம் படுத்திருந்ததால், பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் மெயின் ரோட்டில், தங்கமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று, சித்திரை பவுர்ணமி விழா நடந்தது. நேற்று குடமுருட்டி ஆற்றின் கரையில் இருந்து, திரளான பக்தர்கள் பால் குடம், அலகு காவடி எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக வந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். பின், அபிஷேக, ஆராதனை, கஞ்சி வார்த்தல் நடந்தது. நேற்று காலை, கோவில் வளாகத்தில், சமயபுரம் மாரியம்மன் சன்னதியில் உள்ள அம்மன் தலையில், நாகப்பாம்பு ஒன்று ஏறி நின்றது. காலை, 6:00 மணி முதல், ஒரு மணி நேரத்திற்கும் மேல், தலை மீது ஏறுவதும், கை மீது இறங்குவதுமாக இருந்தது. பின், அங்கிருந்து ஊர்ந்து சென்றது. இதை பார்த்து, ஏராளமான பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !