உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாமக்கல் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாமக்கல் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நாமக்கல்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நாமக்கல் கோவிலிகளில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

* நாமக்கல் நகரில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. தொடர்ந்து நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபி ?ஷகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு சுவாமிக்கு தங்க கவசத்தில் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கல்வி ஞானம் பெருவதற்காக தங்க மலர் அபி?ஷகம் நடந்தது.

* நாமக்கல், பாலதண்டாயுதபாணி கோவிலில் அபி ?ஷகம், தீபாராதனை நடந்தது.
* நாமக்கல், கடைவீதி சக்தி கணபதி, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* நாமக்கல் - சேலம் பைபாஸ், கருங்கல்பாளையம் ஸ்ரீதண்டாயுதபாணி கோவிலில், சுவாமிக்கு பல்வேறு அபி?ஷகங்கள் செய்யப்பட்டன.
* நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி முருகன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
* நாமக்கல் - மோகனூர் சாலை, சித்தர் மலையில் சந்தன மகாலிங்கேஸ்வரர் சுவாமி எழுந்தருளி உள்ளார். பல நூறு ஆண்டுகளுக்கு முன், சன்னியாசிகளால் பூஜிக்கப்பட்ட ஆதி சித்தரான சிவபெருமானுக்கு, சித்ரா பவுர்ணிமியை முன்னிட்டு, 108 சங்காபி?ஷகம், வி?ஷச பூஜை நேற்று நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !