லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்ஸவம் துவக்கம்
ADDED :2757 days ago
பெரணமல்லூர்: பெரணமல்லூர் அருகே, லட்சுமி நரசிம்மர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன், நேற்று துவங்கியது. திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த, ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், சித்திரை மாத, பிரம்மோற்ஸவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை, மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர், உற்சவ மூர்த்திகள் சீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்மருக்கு, பல்வேறு பொருட்களால், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பட்டாச்சாரியார்கள், வேத மந்திரம் முழங்க, பிரம்மோற்ஸவ கொடியேற்றம் நடந்தது. வரும், 3ல், மாலை திருக்கல்யாணமும், இரவு கருட சேவையும், 5ல், தேரோட்டமும், நடக்கிறது. 7ல், காலை, தீர்த்தவாரியும், இரவு பிரம்மோற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது.