உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரத்தில் தேர் திருவிழா

கண்டாச்சிபுரத்தில் தேர் திருவிழா

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமாநாதீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.


கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு ஞானாம்பிகை சமேத ராமாநாதீஸ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.


பின், நேற்று காலை 7:00 மணி முதல் மூலவர் ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு மேல் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன் தேர், ஞானாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமிகள் தேர் வீதியுலா பன்னிரு திருமுறை பாடல்களுடன் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேர்களை வடம்பிடித்து இழுத்தனர்.


கண்டாச்சிபுரம், அங்குராயநத்தம், மடவிளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா வெற்றிவேல், விழாக்குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !