உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சித்திரை உற்சவம் நிறைவு

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சித்திரை உற்சவம் நிறைவு

திருப்போரூர்: கந்தசுவாமி கோவிலில் நடைபெற்று வந்த சித்திரை மாத வசந்த உற்சவ விழா, நிறைவு பெற்றது.திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், ஆண்டு தோறும், சித்திரை மாதத்தில் நடைபெறும் வசந்த உற்சவ விழா, ஏப்., 26ல் துவங்கியது. தொடர்ந்து, ஐந்து நாட்கள் நடைபெற்ற விழாவில், உற்சவ மூர்த்தி யான கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன், கோவிலுக்கு அருகாமையில் உள்ள வசந்த மண்டபத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.வசந்த விழா, இறுதி நாளான நேற்று முன்தினம், கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையை திருமணம் முடிக்கும் வைபவத்துடன், இனிதே நிறைவுபெற்றது.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !