திருப்பரங்குன்றம் திரும்பிய முருகன்
திருப்பரங்குன்றம், மதுரையில்
நடந்த மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற
சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் பூப்பல்லக்கு, தாரை வார்த்துக் கொடுத்த
பவளக்கனிவாய் பெருமாள் சிம்மாசனத்தில் திருப்பரங்குன்றம் கோயில்
திரும்பினர்.பெற்றோர் திருக்கல்யாணத்திற்காக தெய்வானை, பவளக்கனிவாய்
பெருமாளுடன் சுப்பிரமணிய சுவாமி ஏப்., 26மதுரை சென்றார். நேற்று முன்தினம்
மாலை விடைபெறும் நிகழ்ச்சி முடிந்து நேற்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில்
இருந்து புறப்பாடாகி தெற்கு ஆவணி மூல வீதி மண்டபத்தில் எழுந்தருளினார்.
சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து சர்வ அலங்காரத்தில் பூப்பல்லக்கில்
புறப்பாடாகிஆவணி மூல வீதிகளில் வலம் சென்று அம்மன் சன்னதியில்
எழுந்தருளினார். பின் பவளக்கனிவாய் பெருமாளுடன் சுப்பிரமணிய சுவாமி,
தெய்வானை திருப்பரங்குன்றம் வந்தனர்.