சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: விடிய, விடிய தசாவதாரம் கோலாகலம்
ADDED :2921 days ago
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில், ராமராயர் மண்டபத்தில் நேற்றிரவு கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
மதுரை ராமராயர் மண்டபத்தில் நேற்றிரவு கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின், அனுமார் கோயிலுக்கு வந்தார். அங்கு, அங்கப்பிரதட்சணம் நடந்தது. நேற்றிரவு ராமராயர் மண்டபத்திற்கு கள்ளழகர் வந்தார். அங்கு தசாவதார நிகழ்ச்சிகள் துவங்கின. முதலாவதாக முத்தங்கி சேவை அலங்காரத்திலும், கடைசியாக மோகினி அலங்காரத்திலும் கள்ளழகர் அருள்பாலித்தார். ஒவ்வொரு அவதார நிகழ்ச்சியாக விடிய, விடிய தசாவதார காட்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.