சங்கராபுரத்தில் பிரதோஷ விழா
ADDED :2822 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் உள்ளிட்ட பகுதியில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவிற்கு பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் ராமலிங்கம் தலைமையில் பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் சங்கராபுரம் முதல்பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், தியாகராசபுரம், முக்கனுர், கடுவனுர், மஞ்சபுத்துர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.