ஆண்டிபட்டி ஆஞ்சநேயர் கோயில் பொங்கல் விழா
ADDED :2753 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் பொங்கல் விழா நடந்தது. விழாவில் திருமஞ்சனக்குடம் அழைத்து வரப்பட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் பலர் தீச்சட்டி, பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம், திருவிளக்கு பூஜைகள் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.