சிறுகடம்பூர் கோவில் திருத்தேர் உற்சவம்
செஞ்சி;செஞ்சி சிறுகடம்பூர் ரேணுகாம்பாள் கோவிலில் நடந்த திருத்தேர் விழாவில் ஏராளமானவர்கள் வடம் பிடித்தனர். செஞ்சி சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் என்கிற ரேணுகாம்பாள் கோவில் பிரமோற்சவ விழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நடந்தது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதியுலாவும் நடந்து வந்தது. கடந்த 29ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 10:00 மணிக்கு மாரியம்மன் கோவில் குளக்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்தனர். கரகம் கோவிலை அடைந்ததும், சிறப்பு பூஜைகள் செய்து பகல் 12:00 மணிக்கு தீமிதி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். மாலை 5:00 மணிக்கு ரேணுகாம்பாள், பரசுராமர், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். விசேஷ தீபாராதனையுடன் பக்தர்கள் வடம் பிடித்தனர். முன்னாள் சேர்மன் ரங்கநாதன் வடம் பிடித்தலை துவக்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.