உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை திருவிழா பால்குட ஊர்வலம்

சித்திரை திருவிழா பால்குட ஊர்வலம்

சேலம்: சேலம், செவ்வாய்பேட்டை, சித்தர்கோவில் சாலை, புதுப்பட்டி மாரியம்மன், காளியம்மன், கருப்பண்ணசுவாமி கோவிலில், சித்திரை பெருவிழா, கடந்த, 17ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, பால்குட ஊர்வலம் நடந்தது. லீ-பஜார், காளியம்மன் கோவிலில் இருந்து, துவங்கிய ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து புறப்பட்டனர். அரிசி மண்டி, நரசிம்மசெட்டி தெரு வழியாக வந்த ஊர்வலம், கோவிலை அடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபி?ஷக, ஆராதனை செய்யப்பட்டது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று, சக்தி கரகம் அழைத்தல், காவு பூஜை, பொங்கல் வைபவம், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !