உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகிராம் சுரத்குமார் கோயிலில் கும்பாபிஷேகம்

யோகிராம் சுரத்குமார் கோயிலில் கும்பாபிஷேகம்

அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலின் வடக்கு கோபுர சன்னதி தெருவில் உள்ள யோகிராம் சுரத்குமார் நாம சேவா சமிதியில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக,கடந்த 30 முதல் யோகிராம் சுரத்குமார் திவ்ய நாம சங்கீர்த்தனம், உபன்யாசம் நடந்தது. மங்கள இசை, குருவந்தனம், விக்னஷே்வரர் பூஜை, அனுக்ஞை, சங்கல்பம், வாஸ்து சாந்தி, கலச ஸ்தாபனம் உட்பட பல நிகழ்ச்சிகள் நடந்தன. மேளதாளத்துடன் யோகிராம் சுரத் குமார் திருஉருவ படம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. நேற்று காலை அஸ்வ பூஜை, கஜ பூஜை, கணபதிேஹாமம், ருத்ர ஜபம், பகவானின் மூல மந்திரேஹாமம் நடந்தது. காலை 9:15 க்கு கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மகாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளிதர ஸ்வாமிஜி கும்பாபிஷேகத்தை நடத்தினார். திருவண்ணாமலை பகவான் யோகிராம் சுரத்குமார் ஆசிரம நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !