உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்பகிரி கிராம தூய மலர் மலை மாதா தேர்த்திருவிழா

புஷ்பகிரி கிராம தூய மலர் மலை மாதா தேர்த்திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, புஷ்பகிரி கிராமத்தில் உள்ள, தூய மலர் மலை மாதா தேர்த்திருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி அருகே, புஷ்பகிரி கிராமத்தில் உள்ள தூயமலர் மலை மாதா ஆலயத்தில், தேர்த் திருவிழா நடந்தது. தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், கடந்த மாதம், 22ல், கொடியேற்றி துவக்கி வைத்தார். கடந்த, ஏழு நாட்களாக, ஆலயத்தில் ஜெயமாலை மற்றும் நவநாள் திருப்பலிகள் நடந்தன. மலர் மலை மாதாவின் திருத்தேர் பவனி வெகு விமரிசையாக நடந்தது. மலர் மலையில் இருந்து புறப்பட்டு, புஷ்பகிரி கிராமத்தில் உள்ள, ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நிறைவடைந்தது. எலத்தகிரி, கந்திகுப்பம், பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !