உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறநிலைய துறையில் நிர்வாக விரிவாக்கம்

அறநிலைய துறையில் நிர்வாக விரிவாக்கம்

நிர்வாக வசதிக்காக, அறநிலையத்துறை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான அனுமதியை, தமிழக அரசு அளித்துள்ளது. தமிழகத்தில், 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், திருமடங்கள், அறக்கட்டளைகள் உள்ளன. இவற்றுக்கு சொந்தமாக, ஏராளமான நிலங்கள், விலை மதிப்பில்லா ஆபரணங்கள் உள்ளன. 1959ம் ஆண்டு முதல், கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள், அறநிலையத் துறை வசம் முழுமையாக கொண்டு வரப்பட்டன. அதன் நிர்வாக வசதிக்காக, கமிஷனர், கூடுதல், இணை, துணை, உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட, பல்வேறு பதவிகள் உள்ளன.சமீப காலமாக, பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிக்கி, அறநிலையத் துறை தவித்து வருகிறது. இந்நிலையில், அறநிலையத் துறை ஆய்வுக் கூட்டம், வழக்கத்திற்கு மாறாக, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்தது.அதில், அறநிலையத் துறைக்கு ஏற்படும் அவப்பெயர், சிலை கடத்தல் உள்ளிட்ட, பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இதற்கான முக்கிய காரணங்களில், நிர்வாக திறன் குறைவும் ஒன்று என கூறப்பட்டது. அதை சரிசெய்ய, அறநிலையத் துறையில், நிர்வாக விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என, முதல்வரிடம் கோரப்பட்டது. அதற்கு, முதல்வரும் ஒப்புதல் அளித்துள்ளார்.இதையடுத்து, நிர்வாக விரிவாக்கம் குறித்து, ஆரம்ப கட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. துறையின் பல பிரிவுகளுக்கு, கூடுதல், இணை, துணை, உதவிக் கமிஷனர்கள், செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர், புதிதாக நியமிக்கப்பட உள்ளதாக, அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !