உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 106வது ராமநவமி விழா

106வது ராமநவமி விழா

நாமக்கல்: ராமகிருஷ்ண மாருத்யாதி பஜன கான சபா சார்பில், 106ம் ஆண்டு ராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது. நாமக்கல் கோட்டை சாலை, கார்னேஷன் சத்திரத்தில், கடந்த, 24ல் துவங்கிய விழாவில் தினமும் அர்ச்சனை, தீபாராதனை மற்றும் திவ்ய நாம பஜனை சங்கீர்த்தனம் ஆகிய வைபவங்கள் நடந்தன. நேற்று காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம்; இரவு, 7:00 மணிக்கு வசந்த கேளிக்கை, திவ்ய நாமம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு, 7:00 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !