கூச்சங்காட்டில் தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்
ADDED :2774 days ago
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் அருகே செலவடை, கூச்சங்காட்டில், பெரியாண்டிச்சி அம்மன், முனியப்பன், அய்யனாரப்பன், பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம், கடந்த, 25ல், யாகசாலை முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று, 100க்கும் மேற்பட்டோர், வெண்ணானம்பட்டி மாரியம்மன் கோவிலிலிருந்து, புனிதநீரை எடுத்துக்கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். இன்று, கணபதி ஹோமத்துடன் யாகபூஜை தொடங்கி, நாளை காலை, 9:30 மணிக்கு, கலசங்களுக்கு புனிதநீருற்றி, கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.
x