திருப்புத்தூரில் பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழா
திருப்புத்தூர்:சப்த மாதாக்கள் பிராஹ்மி :பிரம்மாவின் சொரூபமாக அட்சமாலையும், கமண்டலமும் ஏந்தியநிலையில் அருள் பாலிக்கிறார்மகேஸ்வரி:மகேஸ்வரரின் சொரூ பமாக முச்சூலத்தையும், சந்திரனையும்,பாம்பையும் தரித்து காட்சி தருகிறார். கவுமாரி: குமரனின் அம்சமாக மயிலும்,வேலாயுதமும் சூழ பெரிய வேலாயுதத்துடன் எழுந்தருளி யுள்ளார்.
வைஷ்ணவி: விஷ்ணுவின் சொரூபமாக சங்கு, சக்கரம்,கதை, வில்ஆயுதங்களுடன் விளங் குகிறார்.வராஹி:ஹரியின் வராக வடிவத்தின் சொரூபமாக கலப்பை மற்றம் சாட்டையுடன் தோற்றமளிக்கிறார்.சாமுண்டி:தெற்றிப்பல் கொண்ட வாயும், தலைமாலை ஆபரணமும் கொண்டு தரிசனம் தருகிறார்.
பூச்சொரிதல் விழா....
திருப்புத்தூரின் முக்கிய விழாக்களில் பூச்சொரிதல் விழா சிறப்பானது. வருடந்தோறும் சித்திரை வளர்பிறை பஞ்சமி திதியன்று இவ்விழா நடைபெறும். இன்று (4.05.2018) வெள்ளி க்கிழமை அதிகாலை பூமாயி அம்மனுக்கு சிறப்பு வழிபாட்டுடன்84ம் பூச்சொரிதல் விழா துவங்கும். தொடர்ந்து நகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனை வழிபடுகின்றனர். மேலும் பால்குடம்,முளைப்பாரி, மதுக்குடம் எடுத்தும் பக்தர்கள் அதிகாலை வரை வழிபடுகின்றனர்.
இரவு முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும். நகரின் முக்கிய இடங்களில் இசை, நாடக, பாடல் கச்சேரிகள் நடைபெறும். மின் அலங்காரத் தேர்களில் அம்மன் பவனி நடைபெறும்.
நாளை(5.05.2018) சனிக்கிழமை அதிகாலை 4:00 மணிக்கு மேல் அதிகாலை 5:00 மணிக்குள் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம்செய்து, சிறப்பு தீபாராதனை நடைபெறும். அன்று மாலை 6:00 மணிக்கு மேல் காப்புக் கட்டி வசந்தப் பெருவிழா துவங்கி பத்துநாட்கள் நடைபெறும். அம்மனுக்கு உற்சவமும், திருக்குளம் வலம் வருதலும், 9ம் நாள் இரவு அம்மன் ரத ஊர்வலமும், 10ம் நாள் அம்மனுக்கு பொங்கல் விழாவும் நடைபெறும்.