திருப்புத்தூர் பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழா கோலாகலம்
ADDED :2713 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பூக்களால் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பூத்தட்டுடன் ஊர்வலமாக வந்து அம்மன் சன்னதியில் பூச்சொரிந்து வழிபட்டனர். மேலும் மதுக்குடம், முளைப்பாரி, பால்குடம் எடுத்தும் வழிபட்டனர். இரவில் பல இடங்களில் மின் அலங்காரத் தேர்களில் அம்மன் பவனி நடந்தது. தினசரி இரவு அம்மன் குளத்தை பவனி வருதலும், 9ம் நாள் ரத ஊர்வலமும், 10ம் நாள் பொங்கல் விழாவும் நடைபெறும். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சிவகங்கை ரோட்டில் மாடுவண்டி பந்தயம் நடந்தது.