தண்டீஸ்வரர் கோவிலில் ருத்ர ஜப சிறப்பு அபிஷேகம்
ADDED :2770 days ago
சென்னை: வேளச்சேரி, தண்டீஸ்வரர் கோவிலில், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு, மழை வேண்டி, ருத்ர ஜபத்துடன் கூடிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. வேளச்சேரியில் அமைந்துள்ளது கருணாம்பிகை சமேத, தண்டீஸ்வரர் கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், தோஷ நிவர்த்தி, ஸ்ரீசக்கர பூஜை தளமாக விளங்குகிறது. அக்னி நட்சத்திர, ஆரம்ப தினத்தை முன்னிட்டு, தண்டீஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 9:00 மணிக்கு, மூலவருக்கு பழ வகைகளால் மகா சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, ருத்ர ஜபம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.