உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரஅழகர் கோயில் திருவிழா நிறைவு

வீரஅழகர் கோயில் திருவிழா நிறைவு

மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் நடந்த சித்திரை திருவிழா உற்ஸவ சாந்தியுடன் நிறைவுபெற்றது.மானாமதுரை வீர அழகர் கோயிலில் கடந்த மாதம் 26 ந் தேதி காப்புக்கட்டுடன் சித்திரை திருவிழாதுவங்கியது.தொடர்ந்து 10 நாட்கள் நடந்த இந்த விழாவின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில்மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முக்கிய நிகழ்ச்சியானவைகை ஆற்றில் இறங்கும் விழா கடந்த 30ந் தேதியும், நிலாச்சோறு மே 1ந் தேதியும்நடைபெற்றது.விழா நிறைவாக உற்ஸவ சாந்திக்காக சுவாமி அப்பன் பெருமாள் கோயிலில்அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு தீப ஆராதனை,பூஜைகள் நடைபெற்றன. பூப்பல்லக்கில்எழுந்தருளிய வீர அழகர் கோயிலுக்கு சென்றடைந்தார். ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள்,அர்ச்சகர் கோபிமாதவன்,ஸ்தானீகர் பாபுஜிசுந்தர் ஆகியோர்செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !