உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருங்களையன்பட்டியில் தேர்த்திருவிழா

குருங்களையன்பட்டியில் தேர்த்திருவிழா

எரியோடு: எரியோடு பேரூராட்சி, குருங்களையன்பட்டியில் செல்வவிநாயகர், சாலைக்காளியம்மன், ரணவித்தர், மாரியம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் தேர்த் திருவிழா நடந்தது. ஏப்.24ல் சாமி சாட்டுதல் துவங்கியது. சாமி ஒவ்வொரு கோயிலுக்கும் சிறப்பு வழிபாடு முறையில் பாரம்பரிய நிகழ்வுகள் தினமும் நடந்தன. அக்கினிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், அம்மன் பூந்தேர் இழுத்தல், மஞ்சள் நீராட்டுடன் தெப்பம் செல்லுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாட்டினை குருக்களையன்பட்டி மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !