உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் சீரமைப்பு பணிகள் இழுபறி: சிதைந்து வரும் கட்டமைப்புகள்

கோவிலில் சீரமைப்பு பணிகள் இழுபறி: சிதைந்து வரும் கட்டமைப்புகள்

உடுமலை: பழமையான கோவில் சீரமைப்பு பணிகள் இழுபறியாக உள்ளன. உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோவில், புதுப்பிக்கப்படாமல், ஒவ்வொரு கட்டமைப்பாக சிதைந்து வருகிறது. தொல்லியல் துறை வழிகாட்டுதலுடன், கோவிலை புதுப்பிக்க, இந்து அறநிலையத்துறை அனுப்பிய கருத்துருவுக்கு, அரசு இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்நிலையில், கோவிலின் முன்மண்டபத்தின் அருகிலுள்ள, நடன மண்டபத்தின் மேற்கூரை படிப்படியாக இடிந்து தற்போது, துாண்கள் மட்டுமே உள்ளன. இதே போல், கோபுரம் மற்றும் இதர பகுதிகளில், பல வகையான மரங்கள் வளர்ந்து, உறுதித்தன்மையை சிதைத்து வருகின்றன. முன்கோபுரத்தை ஒட்டியுள்ள மண்டபமும் சிதிலமடைந்து வருகிறது. கண்டியம்மன் கோவில் புனரமைப்பு பணிகளுக்கு, உடனடியாக நிதி ஒதுக்கி, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !