உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லக்கில் பவனி வந்த கரி கிருஷ்ண பெருமாள்

பல்லக்கில் பவனி வந்த கரி கிருஷ்ண பெருமாள்

பொன்னேரி: கரி கிருஷ்ண பெருமாள் கோவின் பிரம்மோற்சவத்தில் நகர சோதனை பல்லக்கு நிகழ்ச்சியில், பெருமாள் பல்லக்கில் பவனி வந்தார். பொன்னேரி, சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரி கிருஷ்ண பெருமாள் கோவிலில், பிரம்மோற்வச விழா நடைபெற்று வருகிறது.

விமரிசை: கடந்த, 10 தினங்களாக கருடோற்சவம், சந்திப்பு திருவிழா, தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து, வெகு விமரிசையாக நடைபெற்றன. தினமும், குதிரை வாகனம், அன்ன வாகனம், புன்ன வாகனம் என, பல்வேறு வாகனங்களில் உற்சவ பெருமாள் வீதி உலா வந்தார். பிரம்மோற்சவத்தின், 11ம் நாள் உற்சவமாக, நேற்று, நகர சோதனை பல்லக்கு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. மாடவீதிகள் வழியாக பல்லக்கில், உற்சவ பெருமாள் கிண்ணி ஏந்தி பவனி வந்து பக்தர்களிடம் வசூலில் ஈடுபட்டு, அருள்பாலித்தார்.

நாளை தெப்பம்: பிற்பகல், 3:00 மணிக்கு, தீர்த்தவாரி எனப்படும் சக்ரஸ்நானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று பெருமானை தரிசித்து சென்றனர்.இன்று, பிற்பகல், 2:00 மணிக்கு சப்தாவரணம், இரவு, 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு ஆகிய உற்சவங்கள் நடைபெறுகின்றன. நாளை, மாலை, 6:30 மணிக்கு தெப்ப உற்சவமும், நாளை மறுநாள், 6:30 மணிக்கு விடையாற்றியுடன் பிரம்மோற்சவ விழாவும் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !