வேப்பூர் முத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா
ADDED :2712 days ago
வேப்பூர்: வேப்பூர் முத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடந்தது. வேப்பூர் முத்து மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இறுதி நாளான நேற்று முன்தினம் நுாறுக்கும் மேற்பட்டோர் அலகு குத்தி முக்கிய வீதி வழியாக சென்று நேர்த்தி கடன் செலுத்தினர். மாலையில் முத்து மாரியம்மன் தேர் வீதியுலா நடந்தது.