உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இல்லோடு விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா

இல்லோடு விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா

செஞ்சி:  இல்லோடு வலம்புரி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா நடந்தது.  செஞ்சி தாலுகா, இல்லோடு கிராமத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா நடந்தது.  இதை முன்னிட்டு நேற்று காலை 6 :00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். காலை 9:00 மணிக்கு கலச பிரதிஷ்டையும், கணபதி ஹோமமும், 11 :00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து விநாயகருக்கு கலசாபிஷேகமும் நடந்தது. பகல் 12 :00 மணிக்கு மகா தீபாராதைனை நடந்தது.  மதியம் அன்னதாமும், இரவு செண்டை மேளம், வாண வேடிக்கையுடன் சாமி வீதி உலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !