நாமக்கல் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
ADDED :2712 days ago
நாமக்கல்: நாமக்கல், பொன்விழா நகர் முத்துமாரியம்மன் கோவில், 19ம் ஆண்டு திருவிழா நடக்கிறது. நாமக்கல், பொன்விழா நகர் முத்துமரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 29ல் துவங்கியது. நேற்று முன்தினம் அம்மனுக்கு மலர் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், அம்மன் வீதி உலா சென்று அருள் பாலித்தார். நேற்று காலை, பூக்குழி வெட்டப்பட்டது. 11:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. மாலை, 3:30 மணிக்கு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை, அம்மன் ரதம் ஏறுதல், மதியம், 2:00 மணிக்கு பொங்கல் வைத்தல் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு ஊஞ்சல் வைபவத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார். நாளை காலை, 6:00 மணிக்கு அம்மன் வீதி உலா, மஞ்சள் நீராடுதல், அம்மன் குடி புகுதல் நடக்கிறது.