உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

பேரையூர், பேரையூர் அருகே அத்திபட்டியில் புதுமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா மே 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 6ல் ஆக்கி படைத்தல், மாவிளக்கு, அம்மன் பூப்பல்லக்கில் பவனி வருதல் நடந்தது. மே 7ல் குதிரை வாகனத்தில் அம்மன் பவனி வந்தார். அன்று பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல், கும்மி, கோலாட்டம், கரகாட்டம், முளைப்பாரி காவடி, 21 அக்னிதீபம் நடந்தது. தொடர்ந்து வண்டப்புலி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலிலிருந்து அத்திபட்டி வரதராஜ் 21 அக்னிசட்டியுடன், 101 அலகு குத்தி வெண்கலரதம் இழுத்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டுதலுடன் விழா முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !