உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் முத்து மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா

திருப்பூர் முத்து மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா

திருப்பூர்:திருப்பூர் மூர்த்திநகர், வரசித்தி விநாயகர், முத்து மாரியம்மன் கோவில், 22ம் ஆண்டு பூச்சாட்டு, பொங்கல் விழா, கம்பம் போடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்; இரவு அம்மை அழைத்தல் நடந்தது. நேற்று காலை, கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்தனர்; மாவிளக்கு, முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. நேர்த்திகடன் செலுத்தி பலரும், பூவோடு ஏந்தி வந்தனர். இன்று, மஞ்சள் நீர் ஊர்வலமும், நாளை அன்னதானமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !