செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா கோலாகலம்
ADDED :2812 days ago
மகுடஞ்சாவடி: சித்திரை திருவிழா, இளம்பிள்ளை, காடையாம்பட்டி, செங்குந்தர் மாரியம்மன் கோவிலில், கடந்த, 1ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்து வந்தது. நேற்று முன்தினம், 108 தீர்த்தக்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, தீ மிதி விழா நடந்தது. அதில் திரளான பக்தர்கள், தீ மிதித்து, நேர்த்திக்கடனை செலுத்தினர்.