ஓசூர் மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா
ADDED :2739 days ago
ஓசூர்: தளி அருகே, 40 ஆண்டுகளுக்கு பின் நடந்த, மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி கொத்தனூர் பகுதியில், பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு பின் நேற்று தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் கங்கை பூஜை, அம்மனுக்கு சிறப்பு பூஜை, ஹோமம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு விரதம் இருந்த பெண்கள், மாவிளக்கை ஏந்தி, அக்னி குண்டத்தில் இறங்கினர். நேற்று காலை, ஊர் பொதுமக்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் நடந்தது. கோவிலை சுற்றி வலம் வந்த தேர், நிலையை அடைந்தது