பசவேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2791 days ago
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த, பெல்லட்டி பசவேஸ்வர சுவாமி கோவில் கும்பாபி?ஷக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, தொட்டமஞ்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்லட்டி கிராமத்தில், கணபதி, மாதேஸ்வரர் மற்றும் பசவேஸ்வர சுவாமி கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கோவில் கும்பாபி?ஷக விழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று மாலை, 5:00 மணிக்கு கங்கை பூஜை, கோ பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நவக்கிரக ஹோமம், ருத்ரா ஹோமம், காலை, 9:00 மணிக்கு கும்பாபி?ஷகம் நடந்தது.