கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
ADDED :2790 days ago
கரூர்: கரூர், காந்திகிராமம் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழா கம்பம் நடுதல் நாளை துவங்குகிறது. வரும், 18ல் பூத்தட்டு ஊர்வலம், 20ல் மாவிளக்கு எடுத்தல், 21ல் அக்னிச் சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், 22 ல், பால்குட ஊர்வலம், 23ல், கம்பம் ஆற்றுக்கு செல்லுதல், மாலை வாண வேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர், மண்டகப்படி உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.