பெருமாள் கோவிலில் ஏகாதசி திருமஞ்சனம்
ADDED :3063 days ago
திருவள்ளூர்:திருவள்ளூரில் உள்ள பெருமாள் கோவில்களில், நேற்று, ஏகாதசி திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு, உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலையில், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக உற்சவர் மாடவீதி புறப்பாடு நடந்தது. திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், உற்சவருக்கு ஏகாதசி திருமஞ்சனம் அலங்காரம் நடந்தது. கொண்டமாபுரம் தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், ராமருக்கு ஏகாதசி பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது.பெருமாள் கோவில்களில் நடைபெற்ற திருமஞ்சனம் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.