மாணிக்கவாசகர் கோயில்கள்
ADDED :2743 days ago
திருவாசகம் பாடிய மாணிக்க வாசகர், சிவன் கோயில்களில் தேவாரம் பாடிய மூவருடன் இருப்பார். இவருக்கு தனி சன்னதி சில கோயில்களில் உள்ளன.
1. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் (புதுக் கோட்டை மாவட்டம்) ஆத்மநாதர் கோயில் மாணிக்கவாசகருக்கு சிவன் குருவாக இருந்து உபதேசித்த தலம்.
2. மதுரை மாவட்டம் திருவாதவூர் மாணிக்கவாசகர் அவதரித்த தலம்.
3. தேனி மாவட்டம் சின்னமனூர். இங்கு மாணிக்கவாசகரே மூலவர். சிவன், அம்பிகை பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.
4. ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில். இங்கு சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை உபதேசித்த தலம்.
5. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில். மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவனே, திருவாசகத்தை எழுதிய தலம். மாணிக்கவாசகர் சிவனுடன் ஐக்கியமாகிய தலம். தில்லைக்காளி கோயில் அருகில் தனி சன்னதி உள்ளது.