காளஹஸ்தியில் உண்டியல் வசூல் 93 லட்சம் ரூபாய்
ADDED :3060 days ago
நகரி: காளஹஸ்தி கோவில் உண்டியலில், 22 நாட்களில், 92.97 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில், வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசிக்கின்றனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம், 22 நாட்களில், 92 லட்சத்து, 97 ஆயிரத்து, 143 ரூபாய் ரொக்கம், 367 கிலோ வெள்ளி, 64 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன. மேற்கண்ட தகவலை, கோவில் நிர்வாக அதிகாரி பிரம்மரம்பா தெரிவித்தார்.