சித்தர் ஜெயந்தி விழா
ADDED :2771 days ago
கரூர்: க.பரமத்தி அடுத்த, பவித்திரமேடு அருகே, பாலசுப்பிரமணிய சுவாமி சித்தர் சமாதி கோவிலில், சித்தர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. பாலசுப்பிரமணிய சுவாமி சித்தரின், 79வது பிறந்தநாளை முன்னிட்டு நடந்த இந்த விழாவில், பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்சாறு முதலான, 18 வகை பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சிவனுக்கு பலவித மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்கள் வழிபட்டனர். அடுத்து, மழை வேண்டி, நடந்த கூட்டுப் பிரார்த்தனையில், ஏராளமானோர் பங்கேற்றனர்.