விஜயராக பெருமாள் கோவில் கொடியேற்றம்
ADDED :2775 days ago
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை பிராமணர் தெருவில் உள்ள, சுந்தவல்லி, விஜயவல்லி உடனுறை விஜயராக பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக, நேற்று மாலை, அங்குரார்ப்பணம் நடத்தப்பட்டது. இன்று மாலை, சேஷ வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர் பெருமாள், நாளை மாலை, சிம்ம வாகனத்தில் எழுந்தருளுகிறார். சனிக்கிழமை தேரில், உற்வசவர் எழுந்தருளுகிறார். ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரியுடன், ஏழு நாள் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.