உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்

மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்

ப.வேலூர்: பொத்தனூர், வடக்குத்தெரு மகா மாரியம்மன் தேர்த்திருவிழா துவங்கியது. ப.வேலூர் அடுத்த, பொத்தனூர் வடக்குத்தெரு மகா மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கியது. நேற்று காலை முதல், காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். வரும், 18ல் பூச்சொரிதல்; 20ல், மறுகாப்பு கட்டுதல் நடைபெறவுள்ளது. வரும், 21 முதல், 26 வரை சிம்மம், ரிஷபம், அன்னப்பட்சி, பூதகி, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடக்கவுள்ளது. வரும், 27ல் வடிசோறு மற்றும் சப்பர வாகனத்தில் அம்மன் வீதி உலா; 28 காலை அம்மன் ரதம் ஏறுதல், மாலை திருத்தேர் புறப்பாடு; 29ல் தீ மிதித்தல், பெண்கள் பூவாரி போடும் நிகழ்ச்சி நடக்கிறது. மே, 31ல் கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல் மற்றும் கிடாவெட்டுதல்; ஜூன், 1 காலை மஞ்சள் நீராடல், மாலை முத்துப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வருதல்; 2ல் கோவிலுக்குள் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !