செங்கன்மாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
ADDED :2774 days ago
சென்னை: செங்கன்மாலீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.கேளம்பாக்கம் அடுத்த, செங்கன்மால் கிராமத்தில், விஜயநகர பேரரசு கால செங்கன்மாலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, மாதம்தோறும் பிரதோஷம், பவுர்ணமி நாட்களில், சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.நேற்று முன்தினம், அரசு விடுமுறை நாளில் வந்த பிரதோஷம் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பால், தயிர், பன்னீர், வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தனர்.தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, பிரதோஷ நாயகருக்கு மலர் அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடந்தது. விழாவில், காஞ்சிபுரம், அ.தி.மு.க., - எம்.பி., மரகதம் உட்பட ஏராளமானோர் பங்கேற்று, சிவனை வழிபட்டனர்.