தங்க கிரீடத்துடன் அய்யனாரப்பன் சுவாமி ஊர்வலம் கோலாகலம்
ADDED :2712 days ago
இடைப்பாடி: இடைப்பாடி அருகே, வேம்பனேரி அய்யனாரப்பன் கோவிலில், சுவாமி ஊர்வலம் நேற்று நடந்தது. இடைப்பாடி அருகேயுள்ள, வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில், வேம்பனேரி, கருப்பன் தெரு, சின்ன முத்தியம்பட்டி, பெரிய முத்தியம்பட்டி, காட்டூர், புதுப்பாளையம் உள்பட, 36 குக்கிராமங்களுக்கு சொந்தமானது. அய்யனாரப்பன் சுவாமியை, 200 ஆண்டுகளாக ஏழு ஊர்களுக்கு சுவாமி ஊர்வலமாக தூக்கி செல்வர். ஆண்டுதோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் சுவாமி ஊர்வலம் நடக்கும். அதேபோல் இந்தாண்டு நேற்று மாலை, ஏழு ஊர்களுக்கும், தங்க கிரீடத்துடன் குதிரை வாகனத்தில் அய்யனாரப்பன் சுவாமியை, பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக தூக்கிச் சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.