உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) வருமானம்

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) வருமானம்

பலன் கருதாமல் உழைக்கும் துலாம் ராசி அன்பர்களே!

ராசிக்கு 7-ல் உள்ள புதன், மே 21 முதல் ஜூன் 6 வரை 8-ம் இடத்தில் இருந்து நன்மையை வாரி வழங்குவார். ஜூன் 10 வரை சுக்கிரன் மிதுனத்தில் இருந்து நற்பலன் தருவார். சனி உங்கள் ராசிக்கு 3ல் இருப்பதால் வருமானம் பன்மடங்கு உயரும். அவரால் காரிய அனுகூலம், பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் விருத்தி உண்டாகும்.

குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வை பலன் வளர்ச்சிக்கு துணை நிற்கும். சுக்கிரன் ஜூன் 10ல் மிதுனத்தில் இருந்து 10-ம் இடமான கடகத்திற்கு செல்வது பாதகமான நிலையே. மே 21க்கு பிறகு, புதன் 8-ல் இருப்பதால் முயற்சியில் வெற்றி கிட்டும்.

ஆடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,
பெருமையும் உண்டாகும்.

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னை மே 21க்கு பிறகு மறையும். அதன் பின் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். சுக்கிரனால் ஆடம்பர வசதிகள் பெருகும். மனதில் ஆனந்தம் நிலைக்கும்.

நண்பர்கள் ஆதரவுடன் செயல்படுவர். பெண்களால் பொருளாதார வளம் கூடும். மே 26,27,28ல் சகோதரிகள் உதவி கரமாக செயல்படுவர். மே 22,23ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

ஜூன் 3,4 ல் அவர்கள் வகையில் பிரச்னை வரலாம். அந்த
நாட்களில் வாக்குவாதத்தை தவிர்க்கவும். ஜூன் 6க்கு பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். விட்டுக் கொடுத்து போகவும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் குறைவிருக்காது. ஆனால், அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மே 24,25,29,30ல் சந்திரனால் தடைகள் வரலாம்.  ஜூன் 7,8,9ல் எதிரிகளின் இடையூறை
முறியடிக்கும் வலிமை பெறுவீர்கள். ஜூன் 6க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம். எனவே புதியவர்களிடம் விழிப்புடன் பழகவும்.

பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். மேலதிகாரிகளின்  ஆதரவு நல்ல முறையில் இருக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப் புடன் செயல்படுவர். விண்ணப்பித்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். ஆனால் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் கூடுதல் கவனம் தேவை. மே 20,21 ஆகிய நாட்கள்
சிறப்பானதாக அமையும்.

ஜூன் 6க்கு பிறகு வேலைப்பளு இருக்கும். வேலையில் பொறுமை தேவை

கலைஞர்கள் நல்ல பலனை காணலாம். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக பெண் கலைஞர்கள் உதவிகரமாக செயல்படுவர். ஜூன் 10 க்கு பிறகு எதிரியால் தொல்லை, மறைமுகப்போட்டி அதிகரிக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர். விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே விரும்பிய பதவி கிடைக்கும். ஜூன் 5,6 ல் மனக்
குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையப் பெறுவர்.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர். ஜூன் 6க்கு பிறகு சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம். கவனம் தேவை.
ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவது நல்லது.

விவசாயிகள் மஞ்சள், கேழ்வரகு, சோளம், பயறு வகைகள் மூலம் போதிய மகசூல் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் சிலகாலம் தள்ளிப்போகும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். ஜூன் 6க்கு பிறகு புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள் கணவனின் அன்பும் ஆதரவும் கிடைக்கப் பெறுவர். உங்களின் அன்பை உணர்ந்து, உறவினர்களும் அனுகூலமாக நடந்து கொள்வர்.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு லாபத்துக்கு குறை இருக்காது. மே31 ஜூன் 1,2ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோக முண்டாகும். பெற்றோர் வீட்டில் இருந்து பணம், சீதனப் பொருள் கிடைக்கப் பெறலாம். மே 15, ஜூன் 10,11 ஆகியவை சிறப்பான நாட்களாக இருக்கும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர். உடல் நலம் சுமாராக இருக்கும்.

* நல்ல நாள்: மே15,20,21, 22,23, 26,27, 28,31  ஜூன் 1,2,7,8,9,10,11
* கவன நாள்: மே 16,17, ஜூன் 12,13 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,6
* நிறம்: பச்சை, கருப்பு

* பரிகாரம்:
●  வெள்ளியன்று லட்சுமிதாயாருக்கு நெய்தீபம்
●  சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை
●  தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !