உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி அமாவாசை ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

வைகாசி அமாவாசை ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம்: வைகாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள்நீராடினர். இந்தாண்டு வைகாசியில் 1, 30ல் அமாவாசை வருகிறது. இதில் சர்வ அமாவாசையான நேற்று(மே 15) ,ராமேஸ்வரம் கோயிலுக்கு ஏராள மான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி அக்னி தீர்த்த கடற்கரையில் திதி பூஜை செய்து கடலில் புனித நீராடினர்.

பின் கோயிலுக்குள்22 தீர்த்தங்களை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி விட்டு, சுவாமி, பர்தவர்த்தினிஅம்மன் சன்னதியில்நடந்த சிறப்பு பூஜையில்பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கூடுதல் கட்டணம்கடந்த சில நாள்களுக்கு முன்பு கலெக்டர் நடராஜன் உத்தரவு மீறி, அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் யாகத்துடன் திதி பூஜைக்கு(அரை மணி நேரம்) ரூபாய் 1500 முதல் 3 ஆயிரம் வசூலித்தனர். இதுவழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம்அதிகம் என பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !