சதுரகிரி மலைக்கு செல்ல தடை
ADDED :2761 days ago
விருதுநகர்: சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சதுரகிரி மலையில் மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, கருப்பனசாமி கோயில் பாறை பகுதிகளில் நீர் வரத்து அதிகரிப்பால் இங்குள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசையையொட்டி சென்ற 500 பக்தர்கள் திரும்பும் வரை மலைக்கு செல்ல வனத்தறை தடைவிதித்துள்ளது.