பழநி ஐம்பொன்சிலை மோசடி வழக்கில் ஆதாரங்களை திரட்டும் பணி மும்முரம்
பழநி: பழநி முருகன்கோயில் ஐம்பொன்சிலை மோசடி வழக்கில், குற்றவாளிகள் தப்பிக்காத வகையில், சாட்சிகள், ஆதாரங்களை சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் திரட்டி வருகின் றனர்.பழநி முருகன் கோயில் நவபாஷாண சிலையை மறைத்து வைக்க, கடந்த 2004ல் 200 கிலோ எடையில் ஐம்பொன்சிலை செய்தனர். அதில் தங்கம், வெள்ளி மோசடி தொடர்பாக, ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் குழுவினர் விசாரிக்கின்றனர்.மலைக்கோயில், பெரியநாயகியம் மன் கோயில் ஐம்பொன்சிலைகளை ஐ.ஐ.டி., நிபுணர்கள் குழு மூலம் ஆய்வுசெய்தனர். 2004ல் கோயிலில் பணிபுரிந்த குருக்கள்கள், அலுவலர்களிடம், போலீசார் ரகசியமாக விசாரிக்கின் றனர். இதுதொடர்பாக ஓய்வுபெற்ற இணை ஆணையர் புகழேந்தி,60. துணைஆணையர் தேவே ந்திரன்,67, கைது செய்துள் ளனர். ஆதாரம் சேகரிப்புபழநியில் ஐ.ஜி., பொன்.மாணிக்க வேல் குழுவினர் கடந்த 4 நாட்கள் நடத்திய விசாரணையில், ஐம்பொன் சிலை மோசடி வழக்கிற்கு வலுசேர்க்கும் வகையில், மேலும் சில சாட்சிகள் ஆதாரங்களை திரட்டியுள்ளனர். நேற்றும் (மே 15) அலுவலர் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள், குருக்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் தந்த விபரத்தால் ஐம்பொன்சிலை மோசடிக்கு உதவியாக இருந்ததாக சில அலுவ லர்கள், குருக்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீ சார் திட்டமிட்டுள்ளனர்.