மதுரையில் தவறுகளை மன்னிப்பதே சிறந்த தவம் சுகிசிவம் பேச்சு
மதுரை: வாழ்க்கையை தவமாக்கிக் கொள்வதோடு, பிறரது தவறுகளை மன்னிப்பதும் தான் தவங்ளிலே சிறந்தது, என சொற்பொழிவாளர்சுகிசிவம் பேசினார்.மதுரையில் தமிழ் இசைச் சங்க த்தின் சிறப்பு சொற்பொழிவில் வாழ்க்கை ஒரு தவம் என்னும் தலைப்பில் அவர் பேசியதாவது: ஒரு மரம் நடுவது என்பது 100 கோயில்கள்கட்டுவதற்கு சமம். பழமையான மரங்களில் சக்தி இருக்கிறது. மதங்கள் சண்டைகளை தான் உருவாக்குகின்றன.
ஆன்மிகத்தால் மட்டுமே உலகம் சிறக்கும். உடல், உள்ளம், உயிர் இவற்றை நேர்கோட்டில் நிறுத்துவதே தவம். மனம் எப்போதும் அலைபாயும். மனம் ஒரு குப்பைத் தொட்டி, தவத்தால் மனதை கட்டுப்படுத்த முடியும்.
மதங்களின் மரபுகள் இன்று போலிகளால் அழிக்கப்படுகிறது. 48 நாட்கள் விரதம் இருந்துதான் சபரிமலைக்கு செல்ல வேண்டும். சுயநலத்திற்காக மரபுகள் மீறப்படுகிறது. கூட்டத்தோடு அல்லாமல் தனிமையில் செய்வது தான் தவம். யார் என்ன சொன்னாலும் மவுனமாக இருப்ப தும், பிறரது தவறுகளைமன்னிப்பதையும் விட வேறு எந்த தவமும் சிறந்தது இல்லை, என்றார்.